Agri Krishnamoorthy: தயவு செய்து வாய்ப்பு கொடுங்கள், கண்ணீர் விட்ட அதிமுக வேட்பாளர் Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
Agri Krishnamoorthy: தயவு செய்து வாய்ப்பு கொடுங்கள், கண்ணீர் விட்ட அதிமுக வேட்பாளர் Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் March 30, 2019 at 04:12PM Agri Krishnamoorthy election campaign. திருப்பத்தூரில் நடைபெற அதிமுக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொண்டர்கள் மத்தியில் கண்ணீர் விட்டு அழுத வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான வீரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக, பாஜக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர். அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் பேசும்போது நான் தேர்தலில் பல தோல்விகளை கண்டவன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். நான் 250 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினேன். அப்போது அந்த வலியை தாங்கிக் கொண்டேன். தற்போது மீண்டும் அதிமுக இன்னொரு வாய்ப்பு கொடுத்துள்ளது என்று பேசும் போது கண்ணீர் விட்டு அழுதார் அப்போது சில நிமிடங்கள் மவுனமாக இருந்தார் உடனே பக்கத்தில் இருந்த ஒன்றிய செயலாளர் ரமேஷ் அவரை சமாதானம் செய்து குடிக்க தண்ணீர் கொடுத்தார் அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் நீங்கள் தான் வெற்றி பெறுவது உறுதி என கரகோஷம் எழுப்பினர் இதனால் சிறிது பரபரப்பு காணப்பட்டது. Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : https://ift.tt/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: https://ift.tt/2lWbzYQ ♥ For Viral Videos: https://ift.tt/2uK1XnQ ♥ For Filmibeat Android App: https://ift.tt/2kUDH1n ♥ For Filmibeat iTunes App: https://ift.tt/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment