5 Most Popular Temples In Tamilnadu | தமிழ்நாட்டில் புகழ்பெற்ற 5 கோவில்கள் Zio Tamil


5 Most Popular Temples In Tamilnadu | தமிழ்நாட்டில் புகழ்பெற்ற 5 கோவில்கள் Zio Tamil May 30, 2018 at 03:26PM கோவில்களுக்கு புகழ் பெற்றது தமிழ்நாடு. மிகப்பெரும் புகழ் பெற்ற பல கோவில்கள் நம்முடைய தமிழ்நாட்டில் உள்ளது. அப்படி மிகவும் புகழ்பெற்ற 10 கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம் 1. பழனி முருகன் கோவில் பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. 2. மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும்.வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும் சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இதில் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாகும் இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. 3. அண்ணாமலையார் கோவில், திருவண்ணாமலை திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் சொல்லப்படும் இது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் . திருவண்ணாமலையில் அமைந்துள்ள இந்த கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது 6 பிரகாரஙகள் 9 ராஜகோபுரங்கள் உள்ளன. இக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன 4. தஞ்சை பெரிய கோவில் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த கோவில் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும். கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித் தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. கோபுரம் மட்டுமே தரைத் தளத்திலிருந்து 216 அடி உயரமுடையது. அதன் உச்சியில் உள்ள வட்ட வடிவ பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ள ஒரே கல் 6. ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில் ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில் திருச்சியில் உள்ள புகழ்பெற்ற கோவிலாகும். அருள்மிகு ரெங்கநாதர் கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம்,220 அடி உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது.

Comments

Popular posts from this blog

Top 10 Most Dangerous Beaches in the World | உலகின் மிகவும் அபாயகரமான 10 கடற்கரைகள் Zio Tamil

பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி? | How to Link Aadhaar Card With PAN Card Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்

கவின் முன்னால் காதலி இவர்தான் ? Kavin Ex-Lover Revealed in Bigg boss 3 | Bigg boss 3 Today | Kavin Top News - Tamil