தமிழகத்திலுள்ள செல்வத்தை அள்ளித்தரும் 5 கோவில்கள் Zio Tamil
தமிழகத்திலுள்ள செல்வத்தை அள்ளித்தரும் 5 கோவில்கள் Zio Tamil June 29, 2018 at 08:14PM செல்வத்தை அள்ளித்தரும் 5 கோவில்கள் கோவிலுக்கு செல்லும் பலரும் பல வேண்டுதல்களை கோவிலில் தெய்வத்திடம் வைப்பார்கள். எல்லா வேண்டுதல்களையும் கடவுள் அவர்களுக்கு நிறைவேற்றி வைப்பார். அதில் பலர் தனக்கு செல்வம் பணம் கிடைத்து நல்லபடியாக வாழ வேண்டும் என வேண்டுவார்கள். அப்படி நீங்கள் கேட்க்கும் செல்வங்களை அள்ளித்தரும் தமிழகத்தில் உள்ள 5 கோவில்களை பற்றி பார்ப்போம். 1. மகாலக்ஷ்மி கோவில் , மகாதானபுரம் இந்த கோவில் கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரத்தில் உள்ள மேட்டு மகாதானபுரத்தில் அமைந்துள்ளது. ஆடிப்பெருக்கு விழா அன்று பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி மிக சிறப்பு . வேண்டுதல் செய்து நிறைவேறியவர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபடுவதோடு மட்டுமல்லாமல் நேர்த்திக்கடன் தலைமுடி காணிக்கை விளை பொருள்கள் கால்நடைகள் தங்கம் வெள்ளி போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்துவார்கள். பக்தர்களுக்கு அளவற்ற செல்வதை அள்ளித்தரும் இந்த மகாலக்ஷ்மி அன்னையின் கோவிலுக்கு நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள். 2. லட்சுமி நாராயணர் திருக்கோவில் காரிசேரி இந்த கோவிலானது விருதுநகர் மாவட்டத்தில் காரிசேரி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. திருவோண நட்சத்திரத்திற்கு முன்பு 28 நாள்கள் விரதமிருந்து லட்சுமி நாராயணரை வணங்கினால் மனதில் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு செல்வம் அதிகரித்து வீடு வளமாக்கும் என்பது நம்பிக்கை. பல அரசியல் பிரமுகர்களும் பிரபலங்களும் சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள். 3. லட்சுமி நரசிம்மர் ஆலயம் பூவரசங்குப்பம் விழுப்புரம் மாவட்டம் பூவரசங்குப்பம் என்னுமிடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டு இனி ஒன்றுமில்லை என்று இருப்பவர்கள் இந்த ஆலயம் வந்து நரசிம்மரை வழிபட்டால் அவர்கள் கடன்கள் எல்லாம் தீர்ந்து செல்வம் பெருகி நல்ல நிலைமைக்கு வருவார்கள். 4. அட்சயபுரீஸ்வரர் கோவில் விளங்குளம் இக்கோவிலானது தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணிக்கு அருகில் விளங்குளம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. அட்சய திருதியை நாள் அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அட்சய திருதியை நாளில் இறைவனுக்கு சந்தனக்காப்பில் முத்துக்கள் பதித்து வழிபாடு நடைபெறும். அட்சயதிரிதியை நாளில் இங்கு இறைவனை வழிபட செல்வம் பெருகி வாழ்வில் வளம் கொழிக்கும் என்பது நிச்சயம். 5. மகாலட்சுமி குபேரன் திருக்கோவில் விழுப்புரம் இக்கோவிலானது விழுப்புரம் மாவட்டம் திருநகரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் குபேரன் அவரது துணைவி சித்ரலேகாவுடன் தெற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. அட்சய திருதியை தினத்தில் பக்தர்கள் தங்களது கரங்களாலேயே மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது சிறப்பு . இங்குள்ள லட்சுமி குபேரனை வழிபட்டால் தடைகள் அனைத்தும் அகன்று அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை
Comments
Post a Comment