காலநீட்டிப்பு இல்லை..அமைச்சர் உறுதி பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்
காலநீட்டிப்பு இல்லை..அமைச்சர் உறுதி பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு- வீடியோ Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ் December 31, 2018 at 10:14AM போதிய கால அவகாசம் கொடுக்கப் பட்டதால் கொடுக்கப்பட்டுவிட்டதால் வரும் ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வரும் என்றும் காலநீட்டிப்பு ஏதும் செய்யக்கூடாது என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் சேலத்தில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் என்ற உறுதிமொழியை கே.சி கருப்பண்ணன் வாசிக்க, சேலம் தர்மபுரி நாமக்கல் கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,மாணவ மாணவிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து நடைபெற்ற விழாவில் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கேசி கருப்பண்ணன் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து முதலமைச்சரின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும் தடை சட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார் DES: No duration of stay Environment Minister KC Karupannan Oneindia Tamil Subscribe for More Videos.. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬ ♥ subscribe :https://www.youtube.com/user/OneindiaTamil ♥ Facebook : http://bit.ly/2mvogwR ♥ YouTube : https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw ♥ twitter: https://twitter.com/thatsTamil ♥ GPlus: http://bit.ly/2lWbzYQ ♥ For Viral Videos: http://bit.ly/2uK1XnQ ♥ For Filmibeat Android App: http://bit.ly/2kUDH1n ♥ For Filmibeat iTunes App: https://apple.co/2mvCE8h ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Comments
Post a Comment